பண்ருட்டியில் நடைபெற்ற சிறப்பு சபை கூட்டம் நகர்மன்ற தலைவர்.க. ராஜேந்திரன் பங்கேற்பு!!
கடலூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில் பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை சேவைகளை மேம்படுத்திடும் வகையில் நகர மன்ற உறுப்பினர்களைக் கொண்டு வார்டு அளவிலான சிறப்பு கூட்டங்களை நடத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் இன்று 29.10.2025 பண்ருட்டி தட்டாஞ்சாவடி GK. மஹால் திருமண மண்டபத்தில் பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட 26 வது வார்டு சிறப்பு சபை கூட்டம் பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான க.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நகராட்சி ஆணையாளர். காஞ்சனா அவர்கள் முன்னிலையில் வருவாய் ஆய்வாளர். அசோகன் அவர்களை கூட்டுநராக கொண்டு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் பொது மக்களிடம் மனுக்களை பெற்று பல்வேறு கருத்துக்கள் வழங்கி வார்டு உள்ள அனைத்து பிரச்சனைகளும் நிறைவேற்றப்படும் என கூறினார். இக்கூட்டத்தில் வார்டு அவை தலைவர். மோகன் மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர். லோகநாதன் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர். ஏழுமலை வார்டு செயலாளர்கள். முருகன், செல்வகுமார் நகர தொண்டரணி அமைப்பாளர். தயாளன் வட்ட பிரதிநிதி அம்சா அல்லி முத்து வார்டு பொருளாளர். ஸ்ரீகாந்த் இளைஞர் அணி துணை அமைப்பாளர். பாலச்சந்தர் ராஜா நகர தகவல் தொழில் பணி அமைப்பாளர். மோகன் மற்றும் வார்டு பகுதி பொதுமக்கள் குடியிருப்போர் நல சங்க பிரதிநிதிகள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு நடைபெற்றது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.



கருத்துகள்
கருத்துரையிடுக