அரக்கோணம் தர்மராஜா கோவில் அருகில் நடைபெற்ற ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருகல்யாணம்!!

இராணிப் பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்புகழ் திருஅருட்பா சபை சார்பில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பி ரமணிய சுவாமிக்கு  மஹா கந்தசஷ்டி பெருவிழா நடை பெற்றது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருகல்யாண வைபவம் நேற்று தொடங்கியது இதனையொட்டி காலை சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் தொடர்ந்து பகல் 12 மணி அளவில் ஸ்ரீ வள்ளிதெய் வானை சமேத ஸ்ரீ சுப்பிரம ணிய சுவாமி திருக்கல்யாணமும் நடந்தது. அப்போது மாப்பிள்ளை வீட்டு சார்பில் தேவராஜ் பள்ளி தம்பதியர்களும்   இரு பெண் வீட்டார் சார்பில் பாரதி ஹரிஹரன்

தம்பதியர்களும் மற்றொருபெண் வீட்டார் சார்பில் வக்கில். யோகானந்தம் சபிதா தம்பதியர்களும்கலந்துகொண்டனர்.மேலும் சிறப்பு விருந்தினர்களாக ராமமூர்த்தி ஆச்சாரி, கற்பகம், சரவணன் உஷாராணி தம்பதியர்களும் ஹரி பிரசாத், சிட்டிபாபு சர்மா, சண்முகம், பார்த்தசாரதி  உள்ளிட்டவர்களும் திரளாக பக்தர்களும் திருக்கல்யாண வைபத்தில் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு கிருஷ்ணா மளிகை ஸ்டோர் குடும்பத்தார் சார்பில் ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கபட்டன இரவு 7மணியள வில் ஊஞ்சல் சேவையும் சிறப்பாக நடந்தேறியது விழா ஏற்பாடுகளில் அரக்கோணம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப் புகழ் திருஅருட்பா சபை தலைவர். தேவராஜ் ஈடுபட்டார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!