ஆண்டிபட்டி அருகே டி. சுப்புலாபுரத்தில் நடைபெற்ற கந்த சஷ்டி நிறைவு நாள் விழா!!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே டி சுப்புலாபுரத்தில் கந்த சஷ்டி திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது இங்கு கந்த சஷ்டி விழா மற்ற ஊர்களை காட்டிலும் மிகவும் வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது கந்த சஷ்டி விழாவிற்கு காப்பு கட்டிய பக்தர்கள் கோயிலில் முதல் நாள் ஒருமிளகு இரண்டாம் நாள் இரண்டு மிளகு என்று ஆறு நாட்களும் அந்த மிளகை மட்டுமே சாப்பிட்டு விரதம் கடைப்பிடிப்பார்கள். ஆறாம் நாள் பருப்பு நீர் நெய்வேத்தியம் செய்து முருகனுக்கு படைத்து பின்பு பக்தர்கள் அந்த பருப்பு நீரை அருந்தி அதன் பிறகு பழங்கள் மட்டும் சாப்பிடும் வழக்கம் உள்ளது. ஏழாம் நாள் திருக்கல்யாணம் முடிந்த பிறகு இரவு ஒரு மணி அளவில் பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதத்தை பெற்றுக் கொண்டு பிரசாதத்தை உண்டு விரதத்தை முடித்து பக்தர்கள் முருகனின் அருளை பெற்று செல்வர். இங்கு ஏழு நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஐந்தாம் காப்பு மூன்றாம் காப்பு மற்றும் கந்த சஷ்டி ஏழாம் நாள் முழுவதும் ஒரு நாள் மட்டும் விரதம் இருந்து முருகனை வழிபட்டு அருள் பெறுவர் மற்ற எல்லா ஊர்களிலும் பால் பலம் அருந்திவிட்டு விரதம் இருக்கும் பழக்கம் உண்டு ஆனால் இங்கு டி சுப்புலாபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கந்தநாதர் கோயிலில் வெறும் மிளகும் மட்டுமே சாப்பிட்டு விரதம் இருந்து பானக்கரம் மட்டும் அருந்தி 7 நாட்களும் விரதம் இருந்து முருகன் அருள் பெறும் பெரும் பாக்கியம் பெரும் அதிசயம் என்று கூட சொல்லலாம் இப்படி ஒரு திருவிழாவாக இங்கு கொண்டாடப்படுகிறது. இந்தக் கோயிலுக்கு சென்னை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுவட்டார பகுதி மக்களும் வந்து காப்பு கட்டி விரதம் இருந்து இன்றைய நினைவு நாள் பூஜையை முடித்து விரதத்தை முடித்து செல்வார்கள் கோயிலில் அன்னதானமும் வழங்கப்படும் இரவு ஒரு மணி அளவில் அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு அன்னதான பிரசாதத்தை உண்டு விரதத்தை அனுஷ்டிக்கப்படுகிறது.
தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக