சோளிங்கா் பேருந்து நிலையத்தில் கழிவறைக்கு சென்று வருவதாக கூறி நரிகுறவப்பெண்ணிடம் ஆறுமாத ஆண் குழந்தையை கொடுத்து விட்டு மாயமான இளம் பெண்ணால் பரபரப்பு !!..

' குழந்தையை  மீட்டு காவல்துறையினா் குழந்தை மீட்பு பாதுகாப்பு உதவியினரிடம் ஒப்படைப்பு '. இதனால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையத்தில்  இரவு ஆறுமாதமே ஆன  ஆண் குழந்தையுடன் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவா். பேருந்து நிலைய சாலை ஓர கடை நடத்திவரும் வயதான பெண்மனியிடம் குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள் கழிவறைக்கு சென்று வருவதாக எனக் கூறி சென்றுள்ளார். அந்தப் பெண் சென்று நீண்ட நேரம் ஆகியும் திரும்ப வரவில்லை. இதனால் செய்வதறியாது  மூதாட்டி சோளிங்கர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளாா்  தகவலின் பேரில் அங்கு வந்த காவல் நிலைய  ஆய்வாளர். ராமச்சந்திரன் மற்றும் காவலா்கள் மூதாட்டியிடம்  இருந்த குழந்தையை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். தொடர்ந்து சைல்டு ஹெல்ப்லைன் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் குழந்தை ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் . அங்கு மருத்துவா்கள் குழந்தைக்கு மருத்துவ பரிசோதனைகளை செய்து வருகின்றனர். இதனிடையே குழந்தையை விட்டுசென்ற இளம் பெண் குறித்து காவர்துறையினா்  பேருந்து நிலையம் மற்றும் சுற்றியுள்ள  பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை  ஆய்வு செய்து வருகின்றனர்.இச்சம்பவம் சோளிங்கரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!