பண்ருட்டியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் !!

கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் பேரில், பண்ருட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்  வழிகாட்டுதலின் பேரில், பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர்.  பரமேஸ்வர பத்மநாபன் மற்றும் உதவி ஆய்வாளர். முரளி ஆகியோர் பண்ருட்டி நகரின் மினி சரக்கு வாகனங்களின்(TataAce)ஓட்டுநர்களிடையேசாலைபாதுகாப்புபற்றியவிழிப்புணர்வு ஏற்படுத்தியும், வாகனங்களின் ஓட்டுநர்கள் குடிபோதையில் வாகனம் இயக்கக் கூடாது எனவும் வாகனங்களில் கம்பி போன்ற அபாயகரமான பொருட்கள் வெளியே நீட்டி இருக்கும் படி எடுத்துச் செல்லக் கூடாது எனவும் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டது. பாதுகாப்பாக வாகனம் இயக்க சாலை விதிகளையும் போக்குவரத்து விதிகளையும் மீறி இயக்கும் வாகன ஓட்டுனர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு  துண்டு பிரசுரம் வழங்கினர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!