ராணிப்பேட்டை அருகே புளியங்கண்ணு கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ நாக கன்னியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற 22 ஆம் ஆண்டு ஆடித்திருவிழா!!




ராணிப்பேட்டை மாவட்டம்,புளியங்கண்ணு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாக கன்னியம்மன் ஆலயத்தில் 22 ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு பால்குடம் மற்றும் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது


இந்த நிலையில் இன்று அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலிலிருந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்களான சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்களை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வருகை தந்தனர்


அப்போது ஆண் பக்தர்கள் அலகுகளை குத்தியபடி ஊர்வலம் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தனர் பின்னர் அருள்மிகு ஸ்ரீ நாக கன்னியம்மன் ஆலயத்தில் ராகு கேது பீடத்தில் அமைந்துள்ள தோஷ நிவர்த்தி 11 அடி உயர நவக்கிரஹ ஸ்ரீ நாககன்னி அம்மனுக்கு வேத மந்திரங்கள் முழங்க பாலாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பித்து வழிபாடு நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ நாககன்னி அம்மனின் அருளை பெற்று சென்றனர்.


மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானத்திலும் பொதுமக்கள் பங்கேற்று உணவு அருந்தி ஆசி பெற்றனர்.இந்த நிகழ்ச்சி ஊர் நாட்டாமைக்காரர்கள் மற்றும் இளைஞர்கள் கிராம பொதுமக்கள் என பலர் பங்கேற்று உள்ளனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!