செங்கல்பட்டு அருகே ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சி பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு காவல்துறை சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சூடு போட்டி!!





தமிழ்நாடு காவல்துறை சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி 2025, செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சி பள்ளியில் 25.7.2025, 26.7.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. வடக்கு மண்டல அணியின் சார்பாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணாடம் காவல் நிலைய முதல் நிலை காவலர். அன்பரசன் அவர்கள் 300 கஜம் இன்சாஸ் பிரிவில் முதல் இடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார். 

தேவனாம்பட்டினம் கடலோர காவல் நிலைய தலைமை காவலர். ராஜகோபால் 300 கஜம் இன்சாஸ் பிரிவில் கலந்துகொண்டு மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். கார்பன் துப்பாக்கி பிரிவில் ஆயுதப்படை தலைமை காவலர். வினோத்குமார், பிஸ்டல் துப்பாக்கி பிரிவில் ஆயுதப்படை தலைமை காவலர்.பார்த்திபன் ஆகியோர்கள் அகில இந்திய துப்பாக்கி குண்டு சுடும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் பதக்கம் மற்றும் அகில இந்திய துப்பாக்கி குண்டு சுடும் போட்டிக்கு தேர்வான காவலர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!