கரூர் மாநகராட்சி வாசவி மகாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு!!
கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் அவர்களால், தமிழ்நாடு மக்களுக்கு தேவையான அடிப்படை மற்றும் அத்தியாவசிய அரசு சேவைகள் மக்களின் வீடுகளுக்கே சென்றடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் துவக்கி வைக்கப்பட்ட #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்கள் கரூர் மாவட்டத்தில் மட்டும் 179 இடங்களில் நடைபெறுகின்றன.
இன்று கரூர் மாநகராட்சி, கரூர் மத்திய கிழக்கு பகுதி, வாசவி மகாலில் நடைபெற்ற சிறப்பு முகாமில், அப்பகுதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் கரூர் மாவட்ட சொந்தங்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி பயன்பெற அன்புடன் வேண்டுகிறேன் என அழைப்பு!
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர். தங்கவேல் இ.ஆ.ப, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.



கருத்துகள்
கருத்துரையிடுக