கடலூர் மாநகராட்சிகுப்பை வண்டியில் வாக்காளர் அட்டைகள்!!

கடலூர் மாவட்டம்,கடலூர் மாநகராட்சி 45 வார்டு பகுதிகள் கொண்ட நிலையில் நான்கு மண்டலங்களாக செயல்படுகிறது. இதில் கடலூர் மஞ்சக்குப்பம் 3வது பிரிவு அலுவலகத்திற்கு நேற்று காலை குப்பைகளை சேகரிப்பதற்காக துப்புரவு பணியாளர். காமாட்சி (38) என்பவர் பேட்டரி வாகனத்தை எடுத்துச் செல்வதற்காக வந்துள்ளார்.அப்போது வாகனத்தின் குப்பை கொட்டும் இடத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் வாக்காளர் அடையாள அட்டைகள், தேர்தலுக்கு அலுவலர்கள் பயன்படுத்தப்படும் பொருட்களாக மை, பேட்ச் உள்ளிட்டவை கிடந்தது. தகவலறிந்து வந்த தாசில்தார். மகேஷ், வருவாய் ஆய்வாளர். வைத்தியநாதன் குப்பை வண்டியில் இருந்த தேர்தல் அடையாள அட்டைகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!