மார்கெட் காந்தி சிலை:அரக்கோணம் சர்வ கட்சி ஆலோசனைக் கூட்டம்!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகராட்சிக்கு சொந்தமான (மார்கெட்)நாளங்காடிகட்டிடம் கடந்த 1949-ம் ஆண்டு கட்டப்பட்டது.அப்போதே  நாளங்காடியின் நுழைவு வாயிலின் மாடியில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை இருந்தது. மேலும்  காந்தி நாளங்காடி என பெயரிடப்பட்டது.

இதனிடையே கடந்த1984-ம் ஆண்டு நகராட்சி நிர்வாகத்தால்  நாளங்காடி கட்டிடம் இடித்து புதுபிக்கபட்டது அப்போதும் இந்த நுழைவு வாயில் பகுதி மட்டும் இடிக்கப்படாமல் நாளாங்காடி கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டு   காந்தி உருவச்சிலை  அதே இடத்தில் வைக்கப்பட்டது ஆகவே, இந்த சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் அமைப்புகள் காந்தி பிறந்த நாள், நினைவு நாள், குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாட்களில் மாலை அணிவித்து மரியாதை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்

இந்த நிலையில் தற்போது புதிய நாலாங்காடி கட்டிடம் கட்டப்பட்டு கட்டிட பணிகள் முடிவடையும் தருவாயில்  மீண்டும்   காந்தி மார்பளவு சிலை வைப்பதற்கு அரசை கோரும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மூத்த அரசியல் பிரமுகர் ஜனதா சேகர் தலைமை தாங்கினார் காங்கிரஸ் மாநில செயலாளர் ராஜ்குமார், நகர காங்கிரஸ் தலைவர். பார்த்தசாரதி, நகர முன்னாள் காங்கிரஸ் தலைவர். ஜி .எஸ். மூர்த்தி, நகர காங்கிரஸ் செயல் தலைவர். எட்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் மாநில காங்கிரஸ் நகரத் தலைவர். கே. வி. ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக

 தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவர். பிஜி மோகன் காந்தி கலந்து கொண்டு பேசினார். மேலும் இந்த கூட்டத்தில் என்.வேணுகோபால்,

பி.சந்திரன், தரணி, வாசுதேவன், பாலகிருஷ்ணன் , ஜி சரவணன், கஜேந்திரன் நாயுடு,  தம்புராஜ்,  இளைய பாரதி, ஏ .கே .மூர்த்தி, மோசூர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் மங்கலம் திருமண மண்டப அதிபரும் மூத்த அரசியல் பிரமுகரமான சிவசுப்பிரமணியம் நன்றி கூறினார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!