ராஜபாளையம் - 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4034 கோடியை வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றியை பாஜக அரசை கண்டித்து தங்கப்பாண்டியன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதியில் திமுக தலைமை கழகத்தின் உத்தரவின்படி விருதுநகர் தெற்கு மாவட்ட கழகத்தின் அறிவுறுத்தலின்படி, இராஜபாளையம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4034 கோடியை வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தளவாய்புரம் ஊராட்சி
பேருந்து நிலையம் அருகில் மற்றும் கிருஷ்ணாபுரம் ஊராட்சி OP அருகில் என இரண்டு இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இராஜபாளையம் ஒன்றிய செயலாளர் S.தங்கப்பாண்டியன்.,MLA அவர்கள் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் வாரியதுணைத்தலைவர் ராசாஅருண்மொழி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், தமிழ்நாட்டை தொடர்ந்து ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறது எனவும், தமிழ் மொழியை அழிக்கும் நோக்கில் இந்தி மொழியை திணிக்கிறது ஒன்றிய பாஜக அரசு அதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் கல்வி நிதி நிறுத்தியது அதனைத்தொடர்ந்து 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான
சம்பள நிதியையும் ஒன்றிய அரசு நிறுத்தி தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது, இருந்தபோதிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து 100 நாள் சம்பள நிதியான 4034 கோடி பெற்று தருவார் எனக்கூறினார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் , நகராட்சி சேர்மன் பவித்ராஷியாம், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூர் சேர்மன்கள் ஜெயமுருகன் பாலசுப்பிரமணியன்,
பேரூர் கழக செயலாளர் இளங்கோவன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி Ex.கூட்டுறவு சங்க தலைவர் பாஸ்கர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி, ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைச்செயலாளர்கள் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






கருத்துகள்
கருத்துரையிடுக