கடலூர் மாவட்டத்தில் போதை பொருட்களை கண்டுபிடிக்க புதியதாக சேர்கப்பட்ட மோப்ப நாய்க்கு பெயர் சூட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ்!


கடலூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தமிழக காவல்துறையில் புதியதாக மோப்ப நாய்கள் சேர்க்க உத்தரவிட்டதின்பேரில் 35 மோப்ப நாய்கள் வாங்கப்பட்டுள்ளது. இதில் கடலூர் மாவட்ட காவல்துறைக்கு ஒரு (Narcotic Dog) மோப்ப நாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று (28.03.2025)- ந்தேதி  கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் கடலூர் மாவட்ட காவல்துறைக்கு புதியதாக வழங்கப்பட்ட Belgiuam Malinois என்ற இனத்தை சேர்ந்த மோப்ப நாய்க்கு "ராக்கி" என பெயர் சூட்டி வாழ்த்தினார். 

மேற்படி மோப்பநாய் 18.8.25 தேதி முதல் கோயம்புத்தூர் பயிற்சி மையத்தில் 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முடித்த பின்பு கடலூர் மாவட்டம் மோப்பநாய் படைபிரிவில் சேர்க்கபட்டு போதை பொருட்களை பதுக்கி வைக்கப்பட்ட இடங்களை கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு உதவிடவும், மாவட்டத்தில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுபடுத்தவும் பயன்படுத்த உள்ளது . துணை காவல் கண்காணிப்பாளர் திரு சார்லஸ் மோப்பநாய் பிரிவு தலைமை காவலர் திரு இளங்கோவன் மற்றும் மோப்பநாய் பிரிவு போலீசார் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!