பனப்பாக்கம் அருகே மேலபுலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சி!


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம் பனப்பாக்கம் அருகே மேலபுலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சி மாணவ மாணவியர் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் அனிதா நாராயணன் தலைமை தாங்கினார், 

ஒன்றியக்குழுஉறுப்பினர் மனோகரன், து.தலைவர் கிரிஜா,மு.உ.தொ.கல்வி அலுவலர்உத்தமன், RtdHMஹரிஹரன், முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் விநாயகம் அனைவரையும் வரவேற்றார். விழாவில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,கல்விப் புரவலர்கள், முன்னாள் மாணவர்கள், SMCஉறுப்பினர்கள்,பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு பிள்ளைகளின் கலை நிகழ்சிகளை கண்டுகளித்தனர். 

ஏற்கனவே உள்ள 155புரவலர்களுடன் புதிதாக 5 புரவலர்கள் இணைந்தனர். ஆசிரியைகள் மலர்விழி,ஐடா,ஞானம்,சியாமளா,அகிலா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தனர் SMC தலைவர் மணிமேகலை லிங்கநாதன், PTC பார்த்திபன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!