கடலூர்-காவல்துறை துப்பறிவு மோப்பநாய் படைப்பிரிவு சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு மற்றும் சாகச நிகழ்ச்சி!!

 


கடலூர் மாவட்டம் 

கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் IPS அவர்களின் மேற்பார்வையில், கடலூர் மாவட்டம் காவல்துறை துப்பறியும் மோப்பநாய் படைபிரிவு சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கடலூர் மஞ்சக்குப்பம் 

புத்தக திருவிழாவில்  விழிப்புணர்வு  சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில்

1. துப்பறியும் மோப்ப நாய்கள் வணக்கம் செலுத்துதல்.

2. துப்பறியும் மோப்ப நாய்களின் அணிவகுப்பு மற்றும் பயிற்சியாளர்களின் கட்டளைக்கு கீழ்பணிதல்

3. மோப்ப நாய் லியோவின் தனித்திறமையை மக்களுக்கு காண்பித்தல்.

4. மோப்ப நாய் லியோ வண்ணப்பெட்டியில் மறைத்து வைத்துள்ள வெடிகுண்டை கண்டுபிடித்தல். இதன் மூலம் மக்களுக்கு பொது இடங்களில் பஸ் நிலையம், இரயில் நிலையம், திருவிழாக்கள் நடைபெறும் இடங்களில், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் காணப்படும் பொருட்களை, குறிப்பாக சூட்கேஸ், பேக், போன்றவற்றை பொதுமக்கள் தன்னிச்சையாக அதை திறப்பது (ம) எடுத்துக்கொண்டு செல்லுதல் கூடாது. மாறாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். காவல்துறை வரும்வரை அந்த பொருட்களின் அருகில் யாரும் செல்லாமல், அந்த இடத்தை சுற்றி பாதுகாக்கவும் வேண்டும். காவல்துறை வந்தவுடன் அந்த பொருளை பார்வையிட்ட மாவட்டத்தில் இருக்கும் துப்பறியும் மோப்பநாய் (மற்றும்) வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவிற்கு தகவல் தெரிவிப்பார்கள். அவர்கள் விறைவாக வந்து அந்த பொருளை கைப்பற்றி, மக்கள் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று செயலிழக்க செய்வார்கள்.


5. மோப்ப நாய் பீட் வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டள்ள வெடிமருத்தை கண்டுபிடித்தல். இந்த நிகழ்ச்சி மூலமாக மக்களுக்கு அறிவுறுத்துவது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நிற்கும் வாகனத்தில் பேக், பை போன்ற பொருள்கள் இருந்தால் அதை திறந்து பார்க்க கூடாது. காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவேண்டும். உடனடியாக துப்பறியும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிப்பவர் மற்றும் அதனை செயலிழக்க பிரிவனர் வந்து, அது வெடிக்க கூடிய பொருளா என்பதை சோதனை செய்து, அதனை செயலிழக்க செய்வார்கள்.

6. மோப்ப நாய் கூப்பர் வரிசையாக வைக்கப்பட்டுள்ள கைக்குட்டையில் குற்றவாளியின் கைக்குட்டையை கண்டுபிடித்தல். சம்பவ நடந்த இடத்தில் குற்றவாளிகள் விட்டுசென்ற தடயங்கள் இருக்கும். பொது மக்கள் சம்பவ நடந்த வீட்டிற்கு உள்ளே செல்லுதல், குற்றம் நடந்த இடத்தில் கைகளை வைப்பது இதனால் குற்றவாளியின் தடயங்களை சேகரிக்க முடியாமல் போய்விடுகிறது. இதுபோன்று செய்யாமல் காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவேண்டும். விரைவாக சம்பவ இடத்திற்கு மோப்ப நாயுடன் பயிற்சியாளர்கள் வந்து குற்றவாளிகளை கண்டுபிடிப்பார்கள்.

7. மோப்ப நாய் கூப்பர் தனது அபார திறமையால் தடைகளை தாண்டுதல் கடுமையான நெருப்பில் அனலையும் பொருட்படுத்தாமல் நெருப்பு வளையத்திற்குள் சென்று வருதல்.

8. இறுதியாக மோப்பநாய்கள் வணக்கம் செலுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.


-கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!