கடலூர் மாவட்ட செய்தி துளிகள்!

 நாள்:- .31.03.2025 (திங்கள்கிழமை)

😍இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துக்கள்🕌🕋🙏

👉.கடலூரில் தீபாவளி சீட்டு, சிறு சேமிப்புத் திட்டம் நடத்தி 2000 பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த கம்மியம்பேட்டையை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

👉.நெல்லிக்குப்பம் அடுத்த காரணப்பட்டு ஊராட்சியில் ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் எம்.எல்.ஏ தலைமையில் திறக்கப்பட்டது. 

👉.கடலூர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் கோடை வெயில் தாக்கத்தை முன்னிட்டு நீர், மோர் பந்தல் திறப்பு விழா திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் நடைபெற்றது.

👉.கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் உள்ள ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது.

👉.கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3-வது புத்தகத் திருவிழா இம்மாதம் 22-ந்தேதி துவங்கி இன்று திங்கள்கிழமை சிறப்பாக முடிவடைகிறது.

👉.கடலூர் கிளை சிறைச்சாலை தற்போது கறிக்கடையாக மாறி உள்ளது. தற்போது 18 முதல் 21 வயது உடைய கைதிகளை அடைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரி தகவல்.

👉.பண்ருட்டி நகராட்சி சார்பில் நகர்ப்புற கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4 கோடியை 70 லட்சம் செலவில் பண்ருட்டி பேருந்து நிலைய வளாகத்திற்கு கடைகள் கட்டும் பணியை முதலமைச்சர் துவக்கினார்.

👉.பண்ருட்டி அடுத்துள்ள பக்கிரி பாளையம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த எலக்ட்ரீசியன் இருசக்கர வாகனம் ஒன்றோடு ஒன்று மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். 

👉.வாகனங்களில் டயர்களை பதம் பார்க்கும் விளாங்காட்டூர்-மன்னம்பாடி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை. 

👉.நெல்லிக்குப்பம் அருகே வான் பக்கத்தில் இறுதி ஊர்வலத்தின் போது நாட்டுவெடி வெடித்து நான்கு பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

👉.விருத்தாச்சலம் அருகே துப்பாக்கியால் சுட்டு மானை வேட்டையாடிய மர்ம கும்பல் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

👉.கடலூர் சிங்காரத்தோப்பு பகுதியைச் சேர்ந்த பெண் பச்சையாங்குப்பம் சால்ட் அலுவலகம் அருகே கழிவு நீர் கால்வாயில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

👉.குள்ளஞ்சாவடி அருகே புலியூர் காட்டு சாகையில் முந்திரி தோப்பில் சேவல் சண்டை நடைபெற்ற போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் நான்கு பேர் கைது.

👉.தமிழ்நாடு ஐயப்பா சேவை சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வண்டிப் பாளையம் மெயின் ரோடு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

என்றும் மக்கள் பணியில் நிலவன் தொலைக்காட்சி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!