கடலூர்-பணி நிறைவு பெறும் காவலர்களுக்கு பாராட்டு தெரிவித்த மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஐபிஎஸ்

 


கடலூர் மாவட்டம் காவல்துறையில் சிறப்புடன் பணியாற்றி இன்று 31.03.2025 தேதி ஓய்வு பெறும் உதவி ஆய்வாளர்கள்  இளங்கோவன், தகுமாரசாமி,  தெய்வநாயகம், கோபால், சிறப்பு உதவி ஆய்வாளர்கள்,ராஜா,  ஜெயராமன், தலைமை காவலர் ஜெயச்சந்திரன், ஆகியோர்கள் கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வரவழைத்து, 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 

S. ஜெயக்குமார் IPS அவர்கள் சால்வை அணிவித்தும், சான்றிதழ் வழங்கியும் கௌரவித்தார். காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி ஒய்வு பெறும் நீங்கள் உடல் நலனை நன்றாக பேணிகாத்து குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் மென வாழ்த்துரை வழங்கினார். மேலும் ஓய்வு பெற்ற காவல் துறையினர்களுக்கு பணிக்கொடை, விடுப்பு ஊதியம், சிறப்பு சேமநல நிதி. குடும்ப சேமநல நிதி ஆகிய பண பயன்கள் விரைவாக கிடைக்க வேண்டும் என காவல்துறை அமைச்சுப் பணியாளர்களிடம் அறிவுரை வழங்கினார்.

-கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!