கடலூர் மாவட்ட செய்தி துளிகள்!

 நாள்:- .30.03.2025 (ஞாயிற்றுக்கிழமை)

👉.ஆந்திராவில் இருந்து கடலூருக்கு இரயிலில் கடத்தி வரப்பட்ட 58 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தி வந்த 19 வாலிபர்கள் கைது.

👉.ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின்  பிரச்சார  செயலாளர் அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை ரொக்கமாக வழங்க வேண்டும் என கோரிக்கை. 

👉.திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் சாலையில் உள்ள ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

👉.கடலூர் புதுப்பாளையத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.63 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை மேயர் துவங்கி வைத்தார்.

👉.தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில தலைவர் கடலூர் துறைமுகத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சிக்னல் அமைக்க வேண்டும் என காவல் SP-யிடம் மனு.

👉.கடலூரில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் கடலூர் கோவன் நுரையீரல் சிகிச்சை மையம் சார்பில் சிறை கைதிகளுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் 120 புத்தகங்கள் வழங்கப்பட்டது.

👉.தேசிய யானைக்கால் நோய் தடுப்பு திட்டம் சார்பில் நோயாளிகளுக்கு நோய் பராமரிப்பு குறித்த சுய பயிற்சி முகாம் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் நடைபெற்றது.

👉.குறிஞ்சிப்பாடி ஒத்தை தெருவில் கடன் பிரச்சனையால் பாத்திர வியாபாரி உணவில் விஷம் கலந்து உண்டு தற்கொலை செய்து கொண்டார்.

👉.ஸ்ரீ முஷ்ணம் அருகே செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்ததால் மகனை வீட்டுக்குள் வைத்து விவசாயி தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

👉.தமிழக முதல்வர் வழங்கிய 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

👉.விருத்தாச்சலம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என ஆட்சியர் தகவல்.

👉.தியாகதுருகம் வட்டார கல்வி அலுவலகத்தில் 15 கையடக்க கணினி திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

👉.ரம்ஜான் பண்டிகையையொட்டி தியாகதுருகம் வாரச்சந்தையில் ரூ.70 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை.

👉.விருத்தாச்சலம் அடுத்த ஆலடி அருகே உள்ள கன்னியாங்குப்பம் திரெளபதி அம்மன் கோவில் உண்டியல் பணத்தை திருடி குளத்தில் உண்டியலை வீசி சென்ற மர்ம நபர்கள்.

👉‌.காட்டுமன்னார்கோவில் அடுத்த குருங்குடி கிராமம் போக்குவரத்து இடையூறாக தள்ளுவண்டி கடை போட்டதை கண்டித்த பெண் காவலரை தள்ளிவிட்ட தம்பதியினர் கைது. 

👉.திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவிக்கு சாத்தநத்தம் கிராமத்தைச் சேர்ந்த நபர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தியதால் போக்சோவில் கைது செய்யப்பட்டார். 

👉.கம்மாபுரம் அடுத்த சாத்துப்பாடி கிராமத்தில் விஷ வண்டுகள் கடித்ததில் 30 பேர் படுகாயம் பள்ளி ஆண்டு விழாவில் பரபரப்பு. 

👉.கடலூர் மாவட்டத்தில் 61 இடங்களில் தி.மு‌.க.வினர் நேற்று 100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கு ரூ.4000 கோடி நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

👉.ஊதியம் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் வருகிற 8-ம் தேதி வேலை நிறுத்தம் என தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க தலைவர் தகவல்.

👉.கம்மாபுரம் காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியின்போது மணிமுக்தாற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது செய்தனர்..

👉.கடலூர் தென்பெண்ணை ஆற்றில் கட்டபட்டு வரும் தடுப்பு அணைக்கு ஆற்றில் இருந்த மணலை முழுவதுமாக சுரண்டி எடுக்கப்படுகிறது. என பொதுமக்கள் காட்டம்.

👉.குள்ளஞ்சாவடி அருகே அரசு அலுவலகம் முன்பு கர்ம காரியம் செய்து வரும் கிராம மக்கள் தனி இடம் ஒதுக்கி தர கோரிக்கை விடுத்துள்ளனர். 

👉.சிதம்பரம் இரயில்வே போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 23 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்த மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு. 

👉.பெண்ணாடம் அடுத்த சிலுப்பனூர் பகுதியில் பொது இடத்தில் மது அருந்திய மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

👉.கடலூர் மாவட்ட 87,500 ஏக்கரில் சொர்ண வாரி பருவ நெல் நடவு பணி தொடங்கி உள்ளது.

என்றும் மக்கள் பணியில் நிலவின் தொலைக்காட்சி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!