திருவரங்குளம் சிவன் கோவிலுக்குள் புகுந்த மழை நீர்:அகற்ற வலியுறுத்தல்!!

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் ஸ்ரீ அரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் மழை பெய்தால் கோவில் முழுவதும் தண்ணீரால் நிரம்பி விடுகின்றது. ஒரு பக்கம் சாலையில் செல்லும் தண்ணீர் கோயிலுக்குள் வருவதும் மறுபுறம் கோவில் ஊற்று நீர், ஒருபுறம் கோவில் பின்புறம் உள்ள தெப்பக்குளத்தில் இருந்து தண்ணீர் கோவிலுக்குள் வந்து விடுவதும் தொடர் கதையாக உள்ளது. இதனை சரி செய்ய பொதுமக்கள் தமிழக அரசின் அறநிலை துறைக்கு பலமுறை கோரிக்கை வைத்தும்மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இதனால் இந்த கோவிலினுடைய உள் பிரகாரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இதற்கு தமிழக அரசின் அறநிலையத்துறை உடனடி தீர்வு காண பொதுமக்கள் பக்தர்கள் தமிழக முதல்வருக்கும் அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!