நத்தத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த (மின் மயானம்) நவீன எரிவாயு தகன மேடை!!

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் பகுதியில் மின் மயானம் அமைக்க வேண்டும் என்பது நத்தம் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இதையடுத்து நத்தம் பேரூராட்சி தேர்தலில் சேர்மன் வேட்பாளராக நின்ற சேக் சிக்கந்தர் பாட்சா தேர்தலில் வெற்றி பெற்றால் மின் மயானம் அமைக்க தனது சொந்த இடத்தை இலவசமாக தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தார். இதனை ஒட்டி தேர்தலில் வெற்றி பெற்று  பேரூராட்சி தலைவராக உள்ள சேக் சிக்கந்தர் பாட்சா தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக நத்தம் அருகே அப்பாஸ்புரம், மெய்யம்பட்டி பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தை மின் மயானம் அமைக்க தானமாக வழங்கினார்  தொடர்ந்து 1 கோடியே 38 லட்சம் மதிப்பில் வளாகம்  கட்டுமான பணிகள் நிறைவடைந்து நேற்று நவீன எரிவாயு தகன மேடையில் (மின் மயானம்) இறந்தவர்களின் உடல்களை எரியூட்ட பொதுமக்கள்  பயன்பாட்டுக்கு வந்தது. திறந்த வெளியில் இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டு வந்ததால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் இதனை தவிர்க்கும் வகையில், பொதுமக்களின் நலன் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்திட பேரூராட்சி  உட்பட்ட பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைவரும் இறந்தவர்களின் உடல்களை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொட்டாம்பட்டி சாலையில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்து சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கலாம். என்று பேரூராட்சி சேர்மன்  சேக்சிக்கந்தர் பாட்சா மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர். விஜயநாத் தெரிவித்துள்ளனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!