மழை வெள்ளத்தில் மறைந்து விட்ட மாவட்ட விளையாட்டு மைதானம்!!


புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மைதானத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும் விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் தங்களது பயிற்சியை மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். மைதானத்தில் மழைநீர தேங்கி நிற்கிறது.

மழைக்காலம் வந்தாலே விளையாட்டு மைதானம் உபயோகப்படுத்த முடியாத அளவிற்கு மழைநீர் தேங்கி நிற்பதால் ஈரப்பதம் கொண்டுள்ளது.  இதனால் விளையாட்டுவீரர்கள் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. விளையாட்டு மைதானத்தில் தேவையான அளவு மண் கொட்டி உயர்த்தி சீர் செய்தால்தான் பயிற்சி மேற்கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. 

மேலும் விளையாட்டு மைதானத்தின் நான்கு புறத்திலும் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.  தேங்கி நிற்கும் சாக்கடை நீரால் கொசு உற்பத்தி ஆவதால் தொல்லை அதிகரித்து உள்ளது. நடைபயிற்சி மேற்கொள்ளும்  முதியோர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பாம்புகளின்  படையெடுப்பு அதிகரித்துள்ளது. பயற்சி பெறுபவாகள், நடைபயற்சி மேற்கொள்பவர்கள்பாம்புகளை கண்டு நடுங்குகின்றனர். 

விளையாட்டு  மைதானத்தில் தேவையான அளவு மண்கொட்டி உயர்த்தி பயிற்சிக்கு உகந்ததாக மாற்றிட வேண்டும் என்றும் விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் தேங்கி நிற்கும் சாக்கடைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கால்வாய்க்கு மூடி போட்டு மூடிடவேண்டும் என்றும் , சாக்கடை நீரால் ஏற்படும் கொசுத் தொல்லையை போக்க மருந்து அடித்து கொசுவை ஒழிக்க வேண்டும் என்றும் பாம்புகளின் படையெடுப்பு அப்புறப்படுத்த பாம்புகளைப் பிடித்து வெளியேற்ற வேண்டும் என்றும் விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் நடை பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களும் தமிழக அரசிற்கும் , நகராட்சிக்கும்  வேண்டுகோள் விடத்து உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!