செஞ்சி டேனி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா!!
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த காரியமங்கலத்தில் உள்ள டேனி கல்வியல் கல்லூரியில் 2019, 2020,2021 ஆண்டுக்கானபட்டமளிப்பு விழா டேனி கல்வியில் கல்லூரியில் உள்ள பஸ்கரன் நினைவு பல்நோக்கரங்கத்தில் நடைபெற்றது.
டேனிகல்வி குழுமத்தின் தலைவர். ஜாஸ்பர்தலைமைதாங்கினார்.செயலாளர் டாக்டர். ஸ்டெல்லா பாக்கியவதி முன்னிலை வகித்தார்.கல்வியாளர் டாக்டர். சக்திவேல் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் முன்னாள் அமைச்சர். செஞ்சி மஸ்தான், எம்எல்ஏ, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர். ராஜசேகரன், ஆகியோர் கலந்து கொண்டு 173 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் வல்லம் ஒன்றிய பெருந்தலைவர். அமுதா ரவிக்குமார்,மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், பழங்குடி இருளர் அமைப்பு நிர்வாகி. சுடரொளி சுந்தரம், வழக்கறிஞர். வெற்றிச்செல்வன், மேல் தளவாய் ஊராட்சி மன்ற தலைவர். கலைச்செல்வி பாலச்சந்தர், காரியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர். பாலு கல்லூரியின் முதல்வர். மகாலட்சுமி பேராசிரியர்கள். பரிதிஓவியா, ஈஸ்வரி, சரவணன், நாகராஜ், குமாரசாமி, ஞானவேல், பாலு, ரமேஷ் குமார், மரியசெல்வம், கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர். சாமுவேல் நன்றி கூறினர்.
விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர். நடராஜன்.

கருத்துகள்
கருத்துரையிடுக