மதுபான கடை இடம் மாற்ற கோரி தமிழக மக்கள் கட்சி சார்பில் மனு!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் தலைமை இடமாக கொண்டு தமிழக மக்கள் கட்சி பணியாற்றி வருகிறது. இந்த கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர். புலியேந்திரன் தமிழக முதலமைச்சருக்கு  மனு ஒன்று அனுப்பினார் அதில் மது கடைகளை வேறு இடத்தில் மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார் அதன்விவரம் வருமாறு 

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் புதிய பேருந்து நிலையம் அருகில் மற்றும் மார்கெட் பகுதியில் அமைந்திருக்கும் அரசு மதுபான கடைகளை இடம் மாற்றம் செய்ய வேண்டும். ஏனெனில் இங்கு பயணிக்கும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் மிகவும் அவதிபடும் நிலை ஏற்பட்டு வருகிறது எனவே மக்கள் நலன் கருதி அரக்கோணம் நகர எல்லையில் இந்த இரண்டு மதுபான கடைகளையும் (ஒயின்ஷாப்) உடனடியாக இடம் மாற்ற செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் கட்சியின் சார்பாக தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். என குறிப்பிட்டு உள்ளார். மேலும் இதன் நகல்களை மாவட்ட ஆட்சியர், மாவட்ட டாஸ்மாக் நிறுவனம், கோட்டாச்சியர், மற்றும் தாசில்தாருக்கும், அனுப்பி வைத்து உள்ளார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!