திருக்கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தை மாவட்ட உணவு நியமன அலுவலர் திடீர்ராய்வு !!


திருவண்ணாமலையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக 731 இடங்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது பத்து நாட்களாக அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் டிசம்பர் 1 முதல் நான்காம் தேதி வரை அதிகமானோர் அன்னதானம் வழங்க உள்ளனர் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானம் செய்பவர்களுக்கு உணவு மேலாண்மை பயிற்சி கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்பட்டுள்ளது. 

எஃப். எஸ். எஸ். ஐ. லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது உணவில் கலர் சேர்ப்பதில்லை உபயோகித்த எண்ணெய் சேர்ப்பதில்லை பெரும்பாலும் 30 முதல் 40 லட்சம் பக்தர்கள் இந்த முறை எதிர்பார்க்கப்படுகிறது மேலும் உணவு பரிமாறுபவர்கள் தலையில் கேப் கைவினைகள் உகந்த பாதுகாப்புடன் எந்தவித நோய் தொற்றும் இல்லாதவர்கள் மட்டுமே மருத்துவச் சான்று பெறப்பட்டு தான் அனுமதிக்கப்பட்டுள்ளனர் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை திருப்பூர் கோவை சேலம் உள்ளிட்ட 22 உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் நான்கு மாவட்ட நியமன அலுவலர்கள் வைத்து 15 குழுவும் சேர்ந்து ஆய்வு செய்து வருவதாக மாவட்ட உணவு நியமன அலுவலர் கூறினார். 

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!