நத்தத்தில் செல்வ விநாயகர் திருக்கோயில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேக விழா !!
திண்டுக்கல் மாவட்டம், வேலம்பட்டி கிராமம் அண்ணா நகரில் உள்ள செல்வ விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
29 12 2023 நேற்று விக்னேஸ்வர பூஜை உடன் தொடங்கிய கும்பாபிஷேக விழா வாஸ்து சாந்தி திருமுறை பாராயணம் கோபூஜை கன்னியா பூஜை நிறைவடைந்து , இன்று 30.11.2025 காலை ராமேஸ்வரம் ,கரந்தமலை, அழகர் கோவில் போன்ற முக்கிய புன்னிய தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்த குடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பாடு நடைபெற்று கோவில் கோபுரத்தின் உச்சியில் எடுத்துச் செல்லப்பட்டு காலை 10 மணி அளவில் வேத மந்திரங்கள் முழங்க கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.பின்பு சுற்றி கூடிஇருந்த பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் செல்வ விநாயகருக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் நத்தம் கோவில்பட்டி மீனாட்சிபுரம் அண்ணா நகர் மற்றும் சுற்றுப் பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர் .அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை செல்வ விநாயகர் திருக்கோயில் திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
தென்மண்டல செய்தியாளர் சின்னதம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக