சாலை வசதி கேட்டு நாற்று நடவு செய்து பெண்கள் போராட்டம் !!
மதுரை மாவட்டம், உசிலை செல்லம்பட்டி ஒன்றியம் பா. மூப்பன்பட்டிக்கு அருகே பேரூராட்சிக்குட்பட்ட ரெட்டியப்பட்டியில் வழி எங்கும் சேரும் சகதியுமாக உள்ளது இந்த வழியில் செல்பவர்கள் நிலை தடுமாறி கிழே விழும் சூழ்நிலை உள்ளது.
இதனால் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவிக்கின்றனர். பள்ளிக்கு மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர்.பலமுறை புகார் அளித்தும் பலன் இல்லாததால் பொறுமை இழந்த பெண்கள் சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேரும் சகதியுமாக இருப்பதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது எனவே இது குறித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேவர் பிளாக் சாலை அல்லது தார் சாலை அல்லது சிமெண்ட் சாலை அமைத்து தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர் மேலும் நடவடிக்கை எடுக்க விட்டால் சாலை மறியலில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.



கருத்துகள்
கருத்துரையிடுக