பண்ருட்டியில் மின்னணு முறையில் பயிா் சாகுபடி கணக்கெடுப்பு!


கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டாரத்தில் நிகழாண்டில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கோடை பயிா்களை மின்னணு முறையில் கணக்கெடுத்து பதிவு செய்யும் பணி தொடங்கியது.பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலக கூட்டரங்கில் பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநா் பாா்த்தசாரதி தலைமையில் இதற்காக பயிற்சியளிக்கப்பட்டது. இதை வேளாண்மை அலுவலா் அனிதா, துணை வேளாண்மை அலுவலா் ராஜ்குமாா் மற்றும் உதவி வேளாண்மை அலுவலா் காா்முகிலன் ஆகியோா் முன்னின்று நடத்தினா். தொடா்ந்து, செட்டிபாளையத்தில் நெல் வயல்களில் மின்னணு பயிா் சாகுபடி கணக்கெடுப்பு தொடா்பாக செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பண்ருட்டி வட்டாரத்தில் நிகழாண்டு கோடை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 39 வருவாய் கிராமங்களிலும் இந்தப் பணியை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குநா் பாா்த்தசாரதி தெரிவித்தாா்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!