தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கள்ளழகர் கோவிலுக்கு ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள நான்கு சிற்றுந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு!



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (27.04.2025), தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அழகர் கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலுக்கு ரூபாய் 1.20 கோடி மதிப்பில் வாங்கப்பட்டுள்ள நான்கு  சிற்றுந்துகளை, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். சேகர் பாபு மற்றும் மாண்புமிகு வணிக வரி, பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்களுடன் குத்து விளக்கு ஏற்றி, கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

கருத்துகள்