நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கான பணி ஆணை வழங்கும் விழா பெ. வடிவேலு பங்கேற்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் 2025-2026ஆம் நிதியாண்டிற்கான, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 369 பயனாளிகளுக்கு தலா ஒரு வீட்டிற்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில், வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி, நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு அவர்கள் கலந்துகொண்டு, திட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவினை வழங்கி பேசியதாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார். ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்று உயர்ந்த நோக்கத்தில் சிறப்பான நிர்வாகத்தை அளித்து வருகிறார். மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும் கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகள் வீடு கட்டும் பணியினை விரைந்து முடிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர். ஜெயஶ்ரீ, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!