விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம்!



விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், திருவெண்ணெய்நல்லூர் மற்றும் மேல்மலையனூர் வட்டாரங்களில் செயல்படுத்தப்படும் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் (Focus Block Development Programme) தொடர்பாக ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட திட்டக்குழு அலுவலர் பூ.நடராஜன் உட்பட பலர் உடன் இருந்தனர். 

அதனைத் தொடர்ந்து திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இருவேல்பட்டு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் வட்டார மருத்துவ அலுவலர் மரு.காயத்ரி உட்பட பலர் உடன் இருந்தனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!