கடலூர் திருப்பாதிரிப்புலியூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய ஆசிரியர்களுக்கானபணி நிறைவு பாராட்டு விழா!!



கடலூர் மாவட்டம்,திருப்பாதிரிப்புலியூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி நிறைவு நாளில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய ஆசிரியர்களுக்கான பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. 



முகாம் மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர் முனைவர் ராஜா ஆ வரவேற்புரை ஆற்றினார். இப்பணி நிறைவு பாராட்டு விழாவிற்கு கடலூர் மாவட்ட கல்வி அலுவலர். ஞான சங்கர் அவர்கள் தலைமையில், முகாம் தொடர்புகள் அலுவலர் .தேவநாதன் அவர்கள் பள்ளி ஆய்வாளர். ஜீவானந்தம் , முகாம் மதிப்பீட்டாளர்.பிரதீப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கடலூர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களான. ஜான் ஜேம்ஸ். வில்லியம்ஸ். டொமினிக்.லூக்காஸ் திருத்துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர். திருக்குமரன் குறிஞ்சிப்பாடி எஸ் கே வி பள்ளி. குமார் ஆகியோர் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து பணி நிறைவு பெற்றனர். 


மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்கள், மூத்த ஆசிரியர்கள் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களை  பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார் . நிறைவாக சமூக அறிவியல் ஆசிரியர. சுகுணா நன்றி கூறினார். பாராட்டு விழாவில் ஆசிரியர்கள்.முருகன் .குணசேகரன்.அரசு.பல்தசர்.செபாஸ்டியன்,பனிமொழி.கேத்ரின்தெரெஸா .ஜாய்ஸ் மேரி .சுமதி,


பீட்ரஸ்.கோமேதகன். ஜெயவீரகுமார் .தர்மதுரை.செல்வகுமார் .சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டு பாராட்டினர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!