கோவையில் ரூ. 28.26 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகள் துவக்கி வைத்து மற்றும் ரூ. 82.14 கோடி மதிப்பிலான ஹாக்கி மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், இன்று கோவையில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ரூபாய் 28.26 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து, ரூபாய் 82.14 கோடி மதிப்பிலான, பல்வேறு வசதிகளுடன் கூடிய அதி நவீன ஹாக்கி 

மைதானம் உட்பட பல புதிய பணிகளுக்கு துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பிறகு, 22,526 பயனாளிகளுக்கு ரூபாய் 215.31 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சியில், மின்துறை மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில் 

பாலாஜி, கோவை மாவட்ட ஆட்சியர். பவன்குமார் ஜி. கிரியப்பனவர் இ.ஆ.ப., மாண்புமிகு கோவை மக்களவை உறுப்பினர். கணபதி. பி.ராஜ்குமார், மாண்புமிகு பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர். கே.ஈஸ்வரசாமி, கோவை மேயர். ரங்கநாயகி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர் சக்திவேல் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!