கடலூர்- கீரப்பாளையம் வட்டாரத்தில் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி ஆய்வு!


கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் வட்டாரம் சி .மேலவன்னியூர் , ஆயிப்பேட்டை ஆகிய கிராமங்களில் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணியினை கடலூர் வேளாண்மை இணை இயக்குநர் மு.லட்சுமிகாந்தன் ஆய்வு மேற்கொண்டார். நடப்பு கோடை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களை கணக்கெடுக்கும் பணி தற்போது கடலூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் வேளாண்மை துறை சார்பில் நடைபெற்றது. 

இந்த நிலையில் கீரப்பாளையம் வட்டாரத்தில் மேற்கொள்ளப்படும் பயிர் கணக்கெடுக்கும் பணியினை இன்று (ஏப்.29)கடலூர் வேளாண்மை இணை இயக்குநர் மு. லட்சுமி காந்தன் ஆய்வு செய்தார். உரிய காலக்கெடுவிற்குள் இப்பணியினை முடித்திடவும் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இப்பணியை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.ஜே ஏ எஸ் வேளாண்மை கல்லூரி மாணவர்கள், வேளாண்மை துறை அலுவலர்கள் ஆகியோர் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். கீரப்பாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் செ. அமிர்தராஜ், உதவி வேளாண்மை அலுவலர்கள் ராஜ்பாபு, வெங்கடேசன், பயிர் அறுவடை பரிசோதகர் வீராசாமி மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!