நெமிலி ஒன்றிய தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணிநிறைவு பாராட்டு விழா!


இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியதமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணிநிறைவு பாராட்டு விழா,மாநில பொதுச்செயலாளர.தாஸ்  நல்லாசியுடன் இன்று மாவட்டத் தலைவர் .இரா. விநாயகம் தலைமையில் பனப்பாக்கத்தில் நடைபெற்றது. நெமிலி வட்டாரச் செயலாளர் நா.சுப்பிரமணி வரவேற்புரை ஆற்றினார். மாநில தலைமை நிலையச் செயலாளரும், இராணிப்பேட்டை மாவட்ட ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளருமான பா.பாலமுருகன்அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு, பணிநிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் கி.எல்லப்பன், பாராட்டி, மாநில அமைப்பின் சார்பாக அன்னாருக்கு சந்தன மாலை, பொன்னாடை அணிவித்து கேடயமும் நினைவுப்பரிசும் வழங்கி சிறப்புரை ஆற்றினார். வட்டார ஓய்வு பிரிவு செயலாளர் அருள்ஜோதி,வட்டாரத் தலைவர்ஏ.சரவணன், வட்டார மகளிரணிச் செயலாளர் கோ.பொற்கொடி, மேனாள் வட்டாரத் தலைவர் தண்டபாணி,ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணைச் செயலாளர் .சிவக்குமார்,மாவட்ட பொருளாளர் அ.பிரகாசம், அரக்கோணம் கல்வி மாவட்ட செயலாளர் க.வாசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

பணிநிறைவு பெற்ற சு.கொளத்தூர், ஊ.ஒ.நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு ஜாக்டோ-ஜியோ இராணிப்பேட்டைமாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஸ்ரீதர்  பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார். இதில் காவேரிப்பாக்கம் வட்டாரச் செயலாளர்  மோ.பாஸ்கரன், வட்டாரத் தலைவர் வே.ருக்மணி,வட்டார பொருளாளர் ஏ.தாவீது,வட்டாரச் செயலாளர்கோ.தமிழ்ச்செல்வன், சோளிங்கர் வட்டாரச் செயலாளர் அ.மகேஷ்பாபு ஆகியோர்  பாராட்டி பேசினர். மேலும், நெமிலி ஒன்றிய ஆசிரியர்கள் உத்தமன், வெங்கடேசன், ஆறுமுகம், கோதண்டன், சுந்தரமூர்த்தி, மெய்யன்பன், தனபால், சுரேஷ், பாலாஜி, தனசேகர், கோபிநாத், ராமச்சந்திரன், நாகராஜன், இராஜேஸ்வரி, வனிதா  உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இறுதியாக வட்டார பொருளாளர் க.தாஸ் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!