கடலூர் அருகே பெண்ணாடம் காவல் நிலையத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய பள்ளி மாணவன் அய்லான்அய்யத்!!


கடலூர் மாவட்டம்  பெண்ணாடம் வள்ளியம்மை நகர் அல்லா பிச்சை , அம்ரின் தம்பதியினரின் மகன் அய்லான் அய்யத் வயது 4,  என்பவர் பெண்ணாடம் ஜெய சக்தி மெட்ரிக் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். காவல்துறையின் மீது ஈர்ப்பு கொண்டு தான் படித்து காவல்துறையில் அதிகாரியாக வர வேண்டும் என அடிக்கடி கூறி வந்தவர், தனது பிறந்தநாளை காவல் நிலையத்தில் கொண்டாட வேண்டும் என பெற்றோர்களிடம் கூறியுள்ளார். அய்லான் அய்யதின் பெற்றோர் பெண்ணாடம்  காவல் உதவிஆய்வாளர்.பாக்கியராஜ் அவர்களிடம் அனுமதி  பெற்று பெண்ணாடம் காவல் நிலையத்தில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார் . பெண்ணாடம் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் . 4 வயது சிறுவன் காவல் நிலையத்தில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வை பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள் .

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!