அரவக்குறிச்சியில் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தோடு புதிய உறுப்பினர் சேர்க்கும் பணி! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு!!



கரூர் மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்,உதயநிதி ஸ்டாலின்  அவர்களின் வழிகாட்டுதலில், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற முழக்கத்தோடு, புதிய கழக உறுப்பினர் சேர்க்கும் பணியை, அரவக்குறிச்சி  சட்டமன்ற தொகுதியை சேர்ந்த BLA-2, BDA மற்றும் பூத் இளைஞர் அணிகள் விரைந்து முடிப்பதற்கான பயிற்சி முகாம்,  

இன்று ஞாயிற்றுக்கிழமை , அரவக்குறிச்சி, நொய்யல் அம்மையப்பர் திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் அழைப்பாளராக  முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக கழக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று நிகழ்ச்சியை  சிறப்பித்தார்.

இந்நிகழ்வில், மாண்புமிகு அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர். இளங்கோ மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!