ஒரு மாநிலத்தின் வளர்ச்சியே,முழு இந்தியாவின் வளர்ச்சி! மகாராஷ்டிரா மாநில ராஜ்யசபா உறுப்பினர் அனில் போண்டே பேச்சு!!

ஒரு மாநிலத்தின் வளர்ச்சியே,முழு இந்தியாவின் வளர்ச்சி என ராணிப்பேட்டையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்வில் மகாராஷ்டிரா மாநில ராஜ்யசபா உறுப்பினர் அனில் சுக்தியோராவ் போண்டே தெரிவித்தார்.

ராணிப்பேட்டை டச் கேம்பஸ் நிறுவனம் சார்பாக,பணியாளர் கல்வியில் சிறந்து விளங்குதல்,   ( excellence in employees education), என்ற தலைப்பில் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டே மேற்கல்வி ஆலோசனை வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் வீடு தேடி கல்வி ஆலோசனை வழங்கும்முறைஅறிமுகப்படுத்தப்பட்டது.வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் தங்கள் நிறுவனத்தில் எவ்வாறு கல்வி சேவைகளை பெறலாம் என்பதையும் அவர்களுக்கு தேவையான பல்கலைக்கழகங்களையும் கல்வி நிறுவனங்களையும் எவ்வாறு தேர்ந்தெடுத்து படிப்பது என்பதையும் டச் கேபஸ் நிறுவனம் கல்வி ஆலோசனை வழங்கப்பட்டது.

இதில் மகாராஷ்டிரா மாநில பாஜக ராஜ்யசபா உறுப்பினரும், பாஜக கிசான் மோர்சா அமைப்பின் தேசிய செயலாளருமான டாக்டர். அனில் சுக்தியோராவ் போண்டே சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு பேசியதாவது... 

தனியார் தொழில் நிறுவனங்களில் பணியாற்றிவரும் தொழிலாளர்கள் பணியில் இருந்து கொண்டே கல்வி கற்று உயர் பதவிக்கு வரலாம்.அதற்கான அனைத்து வாய்ப்புகளும் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால் உருவாகியுள்ளது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சி முழு இந்தியாவின் வளர்ச்சி ஆகும்.இதன் மூலம் விரைவில் 5 ட்ரில்லியன் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதில் ராணிப்பேட்டை டச் கேம்பஸ் நிறுவன தலைமை அதிகாரி பாபு ராஜ், பாஜக மாவட்ட  தலைவர். நெமிலி பி.ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!