சென்னை -திருவூர் சூப்பர் கிங்க்ஸ் சிலம்பம் கிளப் மற்றும் திருநின்றவூர் நடராஜன் கிளப் மாணவ மாணவிகள் சாதனை!!


சென்னை -திருவூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு காய் கனி வார சந்தை வளாகத்தில் திருவூர் சூப்பர் கிங்க்ஸ் சிலம்பம் கிளப் மற்றும் திருநின்றவூர் நடராஜன் சிலம்பம் கிளப் மாணவர்கள் சுமார் 200 மாணவ மாணவிகள் தொடர்ச்சியாக 25 நிமிடங்கள் 25 நொடிகளில் சிலம்பம் கோலில் ரிப்பன் கட்டி பல்வேறு வகையில் சிலம்பம் சுற்றி சாகசங்கள் செய்து யூனிவர்சல் அச்சுயூவர் புக் ஆஃப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்தனர், பெற்றோர்கள் பார்வையாளர்கள் என அனைவரும் எழுந்து நின்று  கரகோஷம் எழுப்பி பாராட்டினர், 


மேலும் மாணவ மாணவிகள் சிலம்பம் சண்டை , வாள் சண்டை , ஈட்டி சண்டை நடனம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி அசத்தினர்.  சாதனை படைத்த மாணவர்களுக்கான  யூனிவர்சல் அச்சுயூவர் புக் ஆஃப் ரெக்கார்ட் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சான்றிதழை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர். சா.அருணன் அவர்கள் திருவூர் சூப்பர் கிங்க்ஸ் கிளப் நிறுவனர். வை.சுந்தர் , பயிற்சியாளர்கள். ஆர்.ஜெயராமன், ரா.விஜய் ஆனந்த்,  மேலாளர். து.லோகேஸ்வரி,மற்றும் திருநின்றவூர் கிளப் நிறுவனர். நடராஜன், தலைமை பயிற்சியளர். ஆர்.ராஜா, 


பயிற்சியாளர்கள்.குணா, பிரான்சின் ஆகியோரிடம் வழங்கினார் , சாதனை படைத்த 200 மாணவர்களுக்கும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்ட பூண்டி வன சரக அலுவலர். எ.முனுசாமி , முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். ஆர்.பழனி,  வழக்கறிஞர்கள் கா.எட்வின் , எ.சங்கமித்ரா, ஆர்.அன்பு , முன்னாள்  ஒன்றிய குழு உறுப்பினர்கள் ர.தலீப்ராஜ், ஹரி,  ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள். கோ.சுபாஷ், சீ.அன்புநாதன், து.முரளி, சமூக சேவகர்கள் ஞா.பால்ராஜ், கோ.தாமோதரன், 


தலைமை காவலர். நை.சீனிவாசன், சா.அமுதன் ,  ரா.உதயகுமார், வை.ஜோதி வி.செல்வராஜ், சி.ஹரி, வை.வெங்கடேசன்.கே.முனுசாமி நா.மகேஷ் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாட்டை திருவூர் சூப்பர் கிங்க்ஸ் நிறுவனர். வை.சுந்தர் ( எ) துரைராஜ், தலைமை பயிற்சியாளர். ஆர்.ராஜா,  பயிற்சியாளர். ஆர்.ஜெயராமன் ஆகியோர்  சிறப்பாக செய்திருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!