அரக்கோணம் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற இலவச கண் மருத்துவ முகாம்!!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரோட்டரி சங்கம் சார்பில் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாம் சென்னை அகர்வால் மருத்துவமனை குழுவினருடன்  அரக்கோணம் ரோட்டரி சங்கம்  மற்றும் சிஎஸ்ஐ மத்திய பள்ளியுடனும் மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம்

 இணைந்து நடத்திய முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர். மனோகர் பிரபு தலைமை தாங்கினார். கண் மருத்துவர் இயக்குனர். எம். எஸ். கோபி முன்னிலை வகித்தார். சமூகநல பொறுப்பாளர். எஸ். டி. ராஜேஷ் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ரோட்டரி சங்க தலைவரும் மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனருமான பி. இளங்கோ அவர்கள் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். சங்க நிர்வாகி விஜயகுமார் உட்பட டாக்டர் அகர்வால் மருத்துவ குழுவினர் முகாம் பணிகளில் ஈடுபட்டனர் இறுதியாக ரோட்டரி சங்க பொருளாளர். லட்சுமிபதி அனைவருக்கும் நன்றி கூறினார். முகாமில் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் சிறப்பு வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!