குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லபாடி. கணவாய் மோட்டூர். பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி நடராஜன் என்பவரின் வீடு இடிக்கப்பட்டது இதை குறித்து இன்று காலை.ஜெய் ஜவான் ஜெய் கிஷான். தலைவர் கர்ணல். தலைமையில்
விநாயகமூர்த்தி நாகராஜ் முன்னிலையில் முன்னாள் ராணுவ படை வீரர்கள் மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்.
100 க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் குவிந்ததால் பரபரப்பு!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கனவாய்மோட்டுர் பகுதியை சேர்ந்த விவசாயி நடராஜன் இவரது மகன் யுவகுமார் இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இதனிடையே விவசாயி நடராஜுக்கு சொந்தமான வீடு வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக புகார் வந்தது
இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் இருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியாத்தம் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமையில் வருவாய்த் துறையினர் மற்றும் வனத்துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீட்டை இடித்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்
ராணுவ வீரருக்கு உதவ முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் சார்பாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட மூன்னால் ராணுவ வீரர்கள் ஊர்வலமாக சென்று குடியாத்தம் கோட்டாட்சியர் சுபலட்சுமி அவர்களிடம் மனு அளித்தனர்
வீட்டை இழந்த ராணுவ வீரரின் குடும்பத்துக்கு மூன்று சென்ட் நிலம் வழங்க வேண்டும் அரசு வீடு கட்ட பரிந்துரை செய்ய வேண்டும் மேலும் அவரது தந்தை விவசாய நிலத்திற்கு செல்ல பாதை ஏற்படுத்தித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக