குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற நியாய விலை கடை விற்பனையாளர்களின் மாதாந்திர கூட்டம் !!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் இன்று காலை நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கான மாதாந்திர கூட்டம் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு வட்ட வழங்கல் அலுவலர். ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு வருவாய் ஆய்வாளர். காமராஜ் முன்னிலை வகித்தார்
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை துணை பதிவாளர். ஸ்வேதா அவர்கள் கலந்துகொண்டு.விற்பனையாளர்களுக்கு கருத்துக்களை எடுத்துக் கூறினார்.
இதில் நியாய விலைக் கடைகளை குறித்த நேரத்தில் திறக்க வேண்டும். குடும்ப அட்டையில் இறந்தவர்கள் பெயர்களை நீக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரம் இல்லை என்றால் திருப்பி அனுப்ப வேண்டும்.
விற்பனையாளர்கள் விடுப்பில் சென்றால் தகுந்த காரணத்தை பெயர் பலகையில் எழுதி வைக்க வேண்டும்.
குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் . கைரேகை வைக்க வேண்டும் போன்றவைகளை எடுத்துக் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சார் துணைப் பதிவாளர் தனலட்சுமி மற்றும் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.


கருத்துகள்
கருத்துரையிடுக