தான் படித்த பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடி செல்பி எடுத்து மகிழ்ந்த கம்பம் சட்டமன்ற உறுப்பினர் மாணவர்கள் உற்சாகம் இப்பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுமே கம்பம் சட்டமன்ற உறுப்பினர்கள் தான்என்றுமாணவர்கள் மத்தியில் சட்டமன்ற உறுப்பினர் பேச்சு!!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டிபுனித அலோசியஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தையும் உந்து தளையும் உறுவாக்கினார். தற்பொழுது கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பள்ளியில் படித்து தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறேன் இன்று பள்ளி மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றி போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று தளபதி விஜய்யின் அறிக்கையினை முன்மொழிந்தார்.
தொடர்ந்து பேசிய அவர் மாணவர்கள் மத்தியில் சமூக நல்லிணத்தையும் ஒழுக்கத்தையும் நான் முன்னோர் காலத்தில் இந்த பள்ளியில் உங்களைப் போல ஒரு மாணவனாக இருந்து வந்தேன் இப்பொழுது கடின உழைப்பால் நேர்மையின் சிகரமாய் மக்கள் சேவகராக உங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன் இந்தப் பள்ளியில் படித்த மாணவன் என்று பெருமையாக கூறுகிறேன் நீங்கள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர் தான் என்று நீங்கள்யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள் ஜெகநாத்மிஸ்ரா எங்கள் பள்ளி மாணவன் நாங்களும் பள்ளி மாணவர்கள் அதனால் சட்டமன்ற உறுப்பினர் நாங்கள் தான் என்று பெருமையாக கூறுங்கள் என்று தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து படித்த வகுப்பறைக்கு சென்று மாணவர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் மாணவர்களுக்கு இந்த வகுப்பறையில் ஒவ்வொருவரும் மருத்துவர் ஆசிரியர் கலெக்டர் அரசியல்வாதி சமூக சேவைகள் பல்வேறு அமைப்புகளாக கொண்ட உறுப்பினர்களாக இருக்கிறீர்கள் என்றுஉங்களது குறிக்கோள்கள் வெற்றி அடையவும் பெற்றோருக்கு உறுதுணையாக இருங்கள் உங்கள் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் என்று மாணவர்கள் மத்தியிலும் உங்ந்ததாலையும் ஏற்படுத்தினார். தொடர்ந்து பள்ளி மாணவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்து மாணவர்களிடம் அன்பையும் உற்சாகத்தையும் பெற்றுச் சென்றார்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக