புதுக்கோட்டையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நீச்சல் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை!!
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மாணவி நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். தஞ்சாவூரில் ஏ.ஒய்.ஏ. ஸ்போர்ட்ஸ் மற்றும் பேமிலி கிளப் நடத்திய நீச்சல் போட்டியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். அதில் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி ம. சந்தோஷிகா 4 × 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் ரிலே (பெண்கள்) பிரிவில் முதல் இடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார் மற்றும் 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் (பெண்கள்) பிரிவில் மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர் ம. நிஷாந்த் கிருஷ்ணன் 4 × 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் ரிலே (ஆண்கள்) பிரிவில் மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவி சந்தோஷிகா மற்றும் வெண்கலப்பதக்கம் பெற்ற நிஷாந்த் கிருஷ்ணன் ஆகியோரை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி நினைவுப் பரிசுகள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார் ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், கலைவாணி உள்ளிட்ட ஆசிரியப்பெருமக்கள் வெற்றிபெற்றவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக