மணக்குடி அருகே, கோவில்விளை பகுதியில் பள்ளி வாகனம் விபத்து:அதிர்ஷ்டவசமாக பள்ளி குழந்தைகள் அனைவரும் உயிர் தப்பினர்!!
கன்னியாகுமரியில் இயங்கி வரும் தனியார் சிபிஎஸ்இ பள்ளி வாகனம் ஒன்று இன்று காலையில் பள்ளி மாணவிகளை ஏற்றி வந்தபோது கோவில்விளையில் வந்து கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குழந்தைகள் அனைவரும் பெரிய காயங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால் பள்ளி வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது. வாகனம் அதிவேகமாக ஓட்டி வரப்பட்டதே விபத்துக்கு காரணம் என விபத்து நடந்த இருந்தவர்கள் தெரிவித்தனர்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக