கோவை நேரு நகர் லயன்ஸ் சங்கம், வாரியர்ஸ் லயன்ஸ் சங்கம், அன்பு லயன்ஸ் சங்கம் ஆகிய மூன்று சங்கங்கள் இணைந்து நடத்திய ஆளுநர் அதிகாரப்பூர்வ வருகை எனும் நிகழ்ச்சி கோவை கொடிசியா அருகே உள்ள ஜே ஆர் ஹாலில் நடைபெற்றது!!



பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242 சி மாவட்டத்தின், கோவை நேரு நகர் லயன்ஸ் சங்கம், வாரியர்ஸ் லயன்ஸ் சங்கம், அன்பு லயன்ஸ் சங்கம் ஆகிய மூன்று சங்கங்கள் இணைந்து நடத்திய ஆளுநர் அதிகாரப்பூர்வ வருகை எனும் நிகழ்ச்சி கோவை கொடிசியா அருகே உள்ள ஜே ஆர் ஹாலில் நடைபெற்றது. இந்த விழாவினை ஜிஎஸ்டி லயன் செந்தில்குமார் ஒருங்கிணைத்திருந்தார். சங்கத்தின் தலைவர்களான கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ், சித்ரா பாலசுப்பிரமணியம் ஆகியோர் தலைமை தாங்கினார். 

கூட்டத்தில், மாவட்ட ஆளுநர் பிஎம்ஜேஎப் ஏ.ராஜசேகர் மாவட்டத்தின் முதல் பெண்மணி நந்தினி ராஜசேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சங்கத்தின் செயல்பாடுகள், சேவைத் திட்டங்கள், தலைமைப் பண்பு பற்றி ஆலோசனைகள் குறித்து சிறப்புரையாற்றி அவர்களின் சேவைகளை  பாராட்டியதுடன், சிறந்த மாவட்ட ஆளுநர் ஏ. ராஜசேகர், சிறந்த மாவட்ட முதல் பெண்மணி நந்தினி ராஜசேகர் ஆகியோருக்கு  மூன்று சங்கங்களும் இணைந்து விருதுகளை வழங்கினர். சிறப்பு அழைப்பாளர்களாக முதலாம் துணை ஆளுநர் தேர்வு சூரி நந்தகோபால்,

இரண்டாம் துணை ஆளுநர் தேர்வு, பாஸ்கர் மாவட்ட அமைச்சரவை செயலாளர்கள் ரவிசங்கர், விஸ்வேஸ்வரன், பொருளாளர் நல்லபாண்டி, எல்சிஐஎஃப் பிரிவின் தலைவர் ஜெயகாந்தன், லயன்ஸ் ஷேர் முருகேசன், மாவட்ட டைரக்டரி தலைவர் கிருஷ்ணகுமார்,மாவட்ட விருது தலைவர் அனீஸ் குமார், மண்டலத் தலைவர்கள் தேர்வு விஜயகுமார், ராமநாதன், மாவட்ட தலைவர் மோகன்ராஜ், எல்.பி.என் மாவட்டத் தலைவர் நந்தகுமார், சர்வீஸ் மாவட்ட தலைவர் கதிரவன், மாவட்ட தலைவர் நேரு நகர்  நந்தகுமார்  சங்கத்தின் செயலாளர் தேஜஸ்வினி, ரமேஷ், வளர்மதி நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கிய வட்டார தலைவர் சுப்பு செந்தில்குமார், அகிலாண்டேஸ்வரி, ரேணுகா, மற்றும் விழாவில் கலந்து கொண்ட  20க்கும் மேற்பட்ட சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், புதிய நண்பர்கள் அனைவருக்கும் சிறப்பான ஒரு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!