கமுதி அருகே சின்ன உடப்பங்குளம் கிராமத்தில் பழைய அரசு பள்ளிக் கட்டிடத்தை சேதப்படுத்தியதாக புகார்!!


இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சின்ன உடப்பங்குளம் கிராமத்தில், பயன்பாட்டில் இல்லாத பழைய அரசு பள்ளிக் கட்டிடத்தை மதுபோதையில் ஒருவர் சேதப்படுத்தியதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கிராம மக்களின் புகாரின்படி, சங்கிலி மகன் சின்னதம்பி என்ற (மாரிமுத்து) என்பவர் மதுபோதையில் அரசு பொதுச் சொத்தான பழைய பள்ளிக் கட்டிடத்தின் கதவினை  உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் நேரில் ஆய்வு செய்து, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!