விஜய் இந்த நிலைக்கு வருவதற்கு அவ்வளவு சுலபம் இல்லை! -நடிகர். ரங்கநாதன்!!
இன்று அதிகாரத்தின் உச்சியில் இருக்கும் விஜய்யின் பின்னால், பலருக்கும் தெரியாத ஒரு கஷ்டமான குடும்பப் பயணம் இருந்ததாக இயக்குநரும் நடிகருமான ரங்கநாதன் பகிர்ந்துள்ள தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர். ரங்கநாதன்:
ஒரு பேட்டியில் அவர் பேசியபோது, "இப்போது விஜய் முதல்வராக இருப்பதால் அவர் எந்த கஷ்டமும் இல்லாமல் வளர்ந்தார் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானது" என்று ஆரம்பித்தார்.
அவர் தொடர்ந்து, "எங்கள் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆரம்ப காலத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். சினிமாவில் ஒரு வாய்ப்புக்காக பல கதவுகளைத் தட்டினார். விஜய் பிறந்த பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கை சீராக ஆரம்பித்தது. அதற்கு முன்பு குடும்பம் சந்தித்த கஷ்டங்களை வெளியில் யாரும் பார்த்ததே இல்லை" என்றார்.
மிகவும் நெகிழ வைத்த சம்பவத்தையும் அவர் பகிர்ந்தார். "விஜய் கைக்குழந்தையாக இருந்த காலம் அது. வீட்டில் குழந்தைக்கு பால் பவுடர் வாங்கிக் கொடுக்கக்கூட வசதி இல்லாத நிலை. ஒரு பிரபல நடிகர் உதவுவார் என்ற நம்பிக்கையில் எஸ்.ஏ. சந்திரசேகர் அவருடைய வீட்டுக்குச் சென்றார். 'நாளைக்கு வாங்க' என்று சொன்னதால் மறுநாளும் முழு நாளும் காத்திருந்தார். இரண்டு நாட்கள் தொடர்ந்து அந்த வீட்டின் வாசலில் நம்பிக்கையோடு இருந்தும், கடைசி வரை ஒரு டின் பால் பவுடர் கூட கிடைக்கவில்லை. அந்த ஏமாற்றத்தோடு வீட்டிற்கு திரும்பிய சம்பவம் இன்னும் மறக்க முடியாது" என்று ரங்கநாதன் உருக்கமாகக் கூறியுள்ளார்.
கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்
கருத்துரையிடுக