கோவையில் நடைபெறவுள்ள "கோமகள் மாரத்தான் 2026 – ரன் பார் ஹேர் நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ டி-ஷர்ட் வெளியீட்டு விழா நிகழ்ச்சி கோவை உப்பிலிபாளையம் பகுதியில் நடைபெற்றது!!

கோவை மாவட்டம்,பெண்களின் முன்னேற்றம், உடல்நலம் மற்றும் சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்டு கோவையில் நடைபெறவுள்ள "கோமகள் மாரத்தான் 2026 – ரன் பார் ஹேர்  நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ டி-ஷர்ட் வெளியீட்டு விழா, கோவை, உப்பிலிபாளயம் பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி நகர் சங்க மைதானத்தில் நடைபெற்றது. 

ஆப் ஸ்கிரின் ஹப் எனும் அமைப்பு, நிர்மலா மகளிர் கல்லூரி இணைந்து நடத்திய இந்த நிகழ்வில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். ஸ்ரீ கிரி பிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாரத்தான் டி-ஷர்ட்டினை வெளியிட்டார். இதில், மாரத்தான் 

வீரர் விஜய் ஆனந்த், ராபர்ட் போஷ் நிறுவனத்தின்  குழுத் தலைவர் வனிதா, ஆட்டம் இன்ஃபினிட்டி நிறுவனத்தின் சார்பாக, ராஜேஷ் ஆகியோருடன், டாக்டர் நித்யா, டாக்டர் மல்லிகா, டாக்டர் கே. மோகனா மற்றும் பார்வதி ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பெண்களின் முன்னேற்றத்திற்கான இந்த முயற்சியை பாராட்டினர்.

ரன் பார் ஹேர் என்பது ஒரு மாரத்தான் மட்டுமல்ல, பெண்களின் பாதுகாப்பு, சமத்துவம், உடல்நலம் மற்றும் அதிகாரமளிப்பை முன்னிறுத்தும் ஒரு சமூக இயக்கம் என்பதை விருந்தினர்கள் வலியுறுத்தினர்.

நிகழ்வை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து ஆதரவாளர்கள், ஊடகங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பாட்டுக் குழுவினர் நன்றியைத் தெரிவித்தனர். ஒவ்வொரு அடியும்... பெண்களின் முன்னேற்றத்திற்கான மாற்றத்தின் தொடக்கம் என விழா மேடையில் பெண்கள் அனைவரும் சூழுரைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!