வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற கோடை கால இலவச ஓவிய பயிற்சி நிறைவு விழா!!

வேலூர் மாவட்டம்,வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆவது பிறந்தநாள் மற்றும் மே--1,தொழிலாளர் தினம் முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச கோடைக்கால ஓவியப்பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது.

ஒருமாதம் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பு 30-05-2026 அன்று நிறைவுபெற்றதையொட்டி மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் ஓவிய வண்ணம் தீட்டும் உபகரணங்கள் வழங்கும் நிறைவு விழா வேலூர் மாவட்ட  பகுத்தறிவாளர் கழக தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு   தலைமையில் குடியாத்தம் புவனேசுவரிப்பேட்டை பெரியார்  அரங்கில் மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஆசிரியர் பி.தனபால்  அனைவரையும் வரவேற்று பேசினார். குடியேற்றம் நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் ப.ஜீவானந்தம்  இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மேனாள்  மாவட்ட செயலாளர் தி.க. கு. இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் சி.லதா, மாவட்ட மகளிர் அணி தலைவர் இரா.ராஜகுமாரி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குடியாத்தம் நகர திராவிடர் கழகத் தலைவர் சி.சாந்தகுமார்  இந்நிகழ்வில் புரட்சி பாடல்களை பாடினார். வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் முனைவர் வே.வினாயகமூர்த்தி  கோடைக்கால ஓவியப்பயிற்சி முகாம் செயல்பாடுகள் குறித்து தொடக்க உரையில் பேசினார்.மாநில மகளிரணி துனைச் செயலாளர் ந.தேன்மொழி,மாவட்ட திராவிடர் கழக தலைவர் வி.இ.சிவக்குமார்,குடியேற்றம் தமிழியக்கம் செயலாளர் ஜெ.தமிழ்ச்செல்வன் ஆகியோர் பயிற்சி பெற்ற மாணவர்களையும்,ஓவிய ஆசிரியர் மெய்யழகன் அவர்களையும் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட  பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன்பரசன் ஆற்றிய சிறப்பு உரையில்  வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மிகச் சிறப்பாக திட்டமிட்டு கடந்த ஒரு மாதம் காலமாக பள்ளி மாணவர்களுக்கு இந்த பயிற்சி முகாமை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். இந்த  பயிற்சி முகாம் நடத்துவதன் நோக்கம் பள்ளி மாணவர்கள்  கல்வியுடன் கூடுதல் அறிவாற்றல் பெற வேண்டும் என்பதே ஆகும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் மூடநம்பிக்கை குறித்த புராணக் கதைகளையும், அறிவியலுக்கு  புறமான கருத்துக்களையும் தெரிவிக்கக் கூடாது. பகுத்தறிவு சிந்தனை உள்ள கருத்துக்களையும் அறிவியல் துணை கொண்டு ஆராயும் மனநிலையும் இளைய தலைமுறை இடம் உருவாக்குவது நம் ஒவ்வொருவரின் கடமையென்று தமது சிறப்பு முறையில் குறிப்பிட்டு பேசினார். இந்த  முகாமில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓவியப் பயிற்சி பெற்றார்கள். இவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் ஓவியம் வரையும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும்,  பயிற்சி முடித்த மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது. சிறப்பாக ஓவியம் வரைந்த முதல் மூன்று மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சதுரங்க பெட்டகம் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பெற்றோர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட  நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தார்கள்.  இறுதியாக வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் க. பரமசிவம் நன்றி உரையாற்றினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!