சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், இன்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது!!
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. இந்த பெட்டியில் பக்தர்களின் கனவில் சென்று, சுப்ரமணியசுவாமி கூறும் பொருள் வைத்து பூஜை செய்யப்படுவது, நுாற்றாண்டு வழக்கமாக உள்ளது. அடுத்த பொருள் வரும் வரை, முந்தைய பொருள் பெட்டியில் இடம் பெறும். பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள், சமுதாயத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அல்லது நடப்பதை முன்கூட்டியே கணிப்பதாக அமையும் என்பதும், பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில் இன்று மண் கலயத்தில் தீர்த்தம், மண் கலயத்தின் மண், ஏர் கலப்பை மற்றும் பிரம்பு வைக்க உத்தரவாகியுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக