திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை தாயுமானசுவாமி உடனுறை மட்டுவார் குழலம்மை திருக்கோவிலின் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்!!


திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை தாயுமானசுவாமி உடனுறை மட்டுவார் குழலம்மை திருக்கோவிலின் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை பிரம்மாண்டமான தேரோட்டம் பக்திப் பெருக்குடன் நடைபெற்றது.திருவிழாவின் 9-ஆம் நாளான இன்று, அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் தாயுமானசுவாமியும், மற்றொரு தேரில் மட்டுவார் குழலம்மை தாயாரும் எழுந்தருள, பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் "நமச்சிவாய" கோஷமிட்டபடி வடம் பிடித்துத் தேரை இழுத்தனர்.

மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள நான்கு உள்வீதிகளிலும் ஆடி அசைந்து வந்த தேர்களைக் காண திருச்சி மட்டுமன்றி அண்டை மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.தேரோட்டப் பாதையெங்கும் நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டதுடன், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. சிகர நிகழ்வான இந்தத் தேரோட்டத்தைத் தொடர்ந்து, நாளை தீர்த்தவாரி மற்றும் கொடியிறக்கத்துடன் இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா இனிதே நிறைவு பெறுகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!